வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் நின்று பைனாகுலர்வைத்துப் பார்த்தாலும் கூட, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளைவெளேர் என, உப்பளங்கள்தான் கண்ணுக்குத் தெரி கின்றன. வேதாரண்யத்தைச் சுற்றி உள்ள ஊர்களில் மட்டும் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு சாகுபடி செய்யப்படுகிறது. அதில் அகஸ்தியம்பள்ளிக்குத்தான் முதலிடம்!
அதிகாலை 4 மணி என்றாலும் சரி... மாலை 4 என்றாலும் சரி... எல்லா உப்பளங்களிலும் ஏதோ ஒரு வேலை சுறுசுறுப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.
'கோடைகாலத்தில்தான் இங்கே சாகுபடியே. ஜனவரிக்கு முன்னாடியே சராசரியா 10 அடிக்கு 12 அடினு தரிசு நிலத்தைப் பாத்திக் கட்டி வயல் மண் கொண்டாந்து நிரவி, 'உப்பு வயல்’ ரெடி பண்ணிடுவோம். கடல்ல இருந்து மோட்டார் மூலம் தண்ணி எடுத்து வயலுக்குப் பக்கத் துலயே தனியா ஒரு குளத்துல சேமிச்சு வெப்போம். 'ஹைட்ரோ மீட்டர்’ என்ற கருவியில் நீரின் அளவு சராசரியா 10 டிகிரி இருக்கிற மாதிரிவெச்சு பாத்திக்கு விட்டுடுவோம். 'ஹைட்ரோ மீட்டர்’ல தண்ணி 0 டிகிரிக்குப் பக்கமா இருந்தா, அதுதான் குடிக்கிற தண்ணி. 10 டிகிரிக்கும் குறையாம இருந்தாத்தான் உப்பு பூக்கும். கட்டிவெச்ச பாத்தியில தண்ணியை விட்டுட்டா, வெயில்பட்டு மூணு நாள்ல உப்பு பூத்துடும். அதை அப்படியே வாரிக் கரையில் போட்டா ஒருநாள்ல உப்பு ரெடி'' -உப்பு தயாரிப்பதற்கான ஃபார்முலாவைக் கடகடவெனச் சொல்லி முடித்தாலும் வேலை ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை!
''கோடை முடியறதுக்குள்ள கடகடனு வேலையை முடிக்கணும். மழை வந்தா பொழப்பு அவ்வளவுதான்.
'
பாத்திக் கட்டுவது, நீர்விடுவது, உப்பை வாருவது, உப்பை உலர்த்துவது, பாக்கெட் போடுவது எனச் சகல வேலைகளையும் ஆண்கள், பெண்கள் என எல்லோரும் செய்கிறார்கள். 'உப்பு உற்பத்தி’ ஒன்று மட்டுமே இந்த ஊர்க் காரர்களுக்கு இருக்கும் வாழ்வாதாரம். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் உப்புத் தொழிலின் மூலம் இங்கே வேலைவாய்ப்புப் பெறுகிறார்கள்.
நமக்கு எல்லாம் சாப்பாட்டில்தான் உப்பு ருசி சேர்க்கிறது. ஆனால், இந்த ஊர்க்காரர்களுக்கு வாழ்க்கைக்கே ருசி சேர்ப்பது இந்த உப்புதான்!
ஆனால் இந்த உப்புகளை கொண்டு செல்ல போதுமான
போக்குவரத்து வசதி இல்லை.ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரயில் பாதை தற்போது அகலபாதையாக
மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த இரயில் பாதைக்காக காத்திருக்கிறது
அகஸ்தியன்பள்ளி