மொத்தம் மூன்று லைட் ஹவுஸ்கள் உள்ளன, கோடியக்கரையில். ஒன்று பாரந்தகசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டாவது, 120 வருஷத்துக்கு முன்னாடி பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது. கடைசியா, 180 அடி உயரம் கொண்ட ஒரு லைட் ஹவுஸுக்கு. அமரர் கல்கி வாசகர்களுக்கு இது படு பரிச்சயம். அவர் வந்தியத்தேவனையும், பூங்குழலியையும், உலவவிட்ட இடம். இங்கிருந்துதான் ராஜராஜசோழன் இலங்கைக்குப் படை நடத்திச்சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 1200 வருஷங்களுக்கு முற்பட்ட அந்த லைட் ஹவுஸ் இன்றைக்கு உடைந்து சிதிலமடைந்து கிடக்கிறது.

அதுவும் சுனாமிக்குப் பிறகு இன்னும் மோசமாகிவிட்டதாம். நமக்கு பழைமையைப் பாழ்படுத்தி பார்ப்பதில்தானே அதிக ஆசை. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட லைட் ஹவுஸை ஃபோட்டோ எடுக்க மட்டும்தான் அனுமதி. 180 அடி உயரம் கொண்ட மூன்றாவது லைட் ஹவுஸ் கோடியக்காடு ஊரை ஒட்டி இருக்கிறது. தமிழகத்திலேயே உயரமான லைட் ஹவுஸ் இதுதானாம்.அதன் மேல் ஏறிப் பார்க்கும்போது நம்மை குழகர் கோயில் கோபுரம் "வா'வென்று அழைக்கிறது.